கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேதுபதி சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோதண்டராமர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பிரமோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றம் நேற்று காலை ஏராளமான வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 25-ந் தேதி திருக்கல்யாண வைபவமும், 28-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.