ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் பூத்த பிரம்ம கமலம் பூக்கள்பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து சென்றனர்

Update: 2023-07-15 19:45 GMT

ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நாராயண நகரை சேர்ந்த தண்டபாணி என்பவரது வீட்டில் வளர்த்த செடியில் நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்ட பிரம்ம கமலம் பூ பூத்து குலுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் வந்து ஆச்சரியத்துடன் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் பிரம்ம கமல பூக்களை பார்த்து சென்றனர். இதேபோன்று சூளகிரி வி.ஐ.பி. நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமல பூச்செடிகளில் 100-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்தன. இதனைக் கண்டு சீனிவாசன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பிரம்ம கமல பூக்களை அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்