அணையில் உற்சாக குளியல்
பண்ணைப்பட்டி கோம்பை அணையில் சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டனர்.
கோடைகாலம் நெருங்கியதை அடுத்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெயிலில் இருந்து தப்பிக்கவும், உடல்சூட்டை தணிக்கவும் குளிப்பதற்காக நீர்நிலைகளை தேடி அலைகிறார்கள். அந்த வகையில், கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டியில் உள்ள கோம்பை அணையில் உற்சாக குளியல் போட்ட சிறுவர்களை படத்தில் காணலாம்.