சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை: போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை: போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு.
சென்னை,
சென்னை பெசன்ட் நகர் அருகே உள்ள பகுதியில் சாலையோரத்தில், தம்பதியர் வசித்து வந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி 5 வயது மகள், மகனுடன் தம்பதியர் படுத்து உறங்கினர். அப்போது, அந்த சிறுமிக்கு அதே பகுதியில் சாலையோரம் வசிக்கும் கார்த்திக் (வயது 25) பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 'போக்சோ' சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன்பு நடந்து வந்தது. போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் டி.ஜி.கவிதா ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, "கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. எனவே, அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இழப்பீடாக அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தீர்ப்பு அளித்துள்ளார்.