சிறுமியை கடத்திய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது

சீர்காழி அருகே சிறுமியை கடத்திய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2022-12-01 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே 17 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சீர்காழி அருகே திருப்புன்கூர் பெரிய தெருவை சேர்ந்த அகோரம் மகன் காளிதாஸ் (வயது 20) என்பவர் அந்த சிறுமியை கடத்திச் சென்று தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்