சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் பத்தமடை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவருடைய மனைவி அமராவதி (26). இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்களில் மகன் சபரி (7) பத்தமடை - களக்காடு சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், சிறுவன் மீது மோதிவிட்டுச் சென்றது. இதனைக் கண்ட குடும்பத்தினர் சிறுவனை மீட்டு சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பத்தமடை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.