ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.

Update: 2023-04-27 21:17 GMT

குன்னம்:

ஏரிக்கு சென்றான்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி துளசி. இந்த தம்பதிக்கு தர்ஷன் (வயது 11), ரெட்சன் (7), சுகன் (4) என 3 மகன்கள் உண்டு.

இந்நிலையில் நேற்று காலை இவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஏரி பகுதியில் சுகன் இயற்கை உபாதை கழிக்க சென்றான். பின்னர் வெகுநேரமாகியும் அவன் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவனை பல இடங்களில் தேடினர்.

சாவு

அப்போது ஏரி தண்ணீரில் சுகன் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவனை பெற்றோர் மீட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுகனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக கூறினர். சிறுவன் ஏரி தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுவன் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்