பாம்பு கடித்து சிறுவன் பலி

குடியாத்தம் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியானான்.

Update: 2023-09-18 17:52 GMT

குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சண்முகவேல் (வயது 6). குடியாத்தத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சண்முகவேலை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பினனர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறுவன் சண்முகவேல் சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்