பாம்பு கடித்து சிறுவன் சாவு

விக்கிரமசிங்கபுரம் அருகே பாம்பு கடித்து சிறுவன் இறந்தான்.

Update: 2023-09-15 19:42 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் பூந்தோட்ட தெரு பத்திரகாளி அம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் பெஞ்சமின். அவரது பேரன் நவீன் கார்த்திக் (வயது 8). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது தாய் வீடு பக்கத்து தெருவில் உள்ள ராமலிங்கபுரம் பகுதியில் உள்ளது. நவீன் கார்த்திக் கடந்த வாரம் அவனது தாத்தா வீட்டில் தூங்கியபோது தன்னை பாம்பு கடித்ததாக கூறினான். இதையடுத்து அவனை உடனடியாக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை நவீன் கார்த்திக் பரிதாபமாக இறந்தான்.

Tags:    

மேலும் செய்திகள்