விக்கிரவாண்டி அருகேபள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலிதாயின் கண் எதிரே நேர்ந்த சோகம்

விக்கிரவாண்டி அருகே பள்ளி வேன் மோதி குழந்தை உயரிழந்தது. மூத்த மகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வந்த தாயின் கண் எதிரே இந்த சோகமான நிகழ்வு நடந்தது.

Update: 2023-08-24 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த அன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி. இவர்களது மகள் எஸ்மிதா(4), மகன் கோகுல்ராஜ்(2½). சிறுமி எஸ்மிதா(4) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். இவள் பள்ளி வேனில் பள்ளிக்கூடத்துக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை திருக்குணம் கூட்டுரோடு பகுதியில் வைத்து பள்ளி வேனில் எஸ்மிதாவை அவரது தாய் பவானி பள்ளி வேனில் ஏற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக கோகுல்ராஜ் தனது அக்காவை பார்க்க ஆவலுடன் ஓடிவந்துள்ளான்.

வேன் சக்கரத்தில்...

அப்போது, வேனின் பின் சக்கரத்தில் சிறுவன் கோகுல்ராஜ் நின்றான். இதை அறியாமல் வேனை டிரைவர் எடுத்ததால், சிறுவன் சக்கரத்தில் சிக்கி பலியானான். கண் இமைக்கும் நேரத்தில் தாயின் கண் முன்னே நடந்த இந்த துயர சம்பவத்தை கண்டு அவர் கூச்சலிட்டார். உடன் டிரைவர் வேனை நிறுத்தினார். தகவல் அறிந்த கஞ்சனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகுல்ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்