சரக்கு வேன் மீது பஸ் மோதி சிறுவன் பலி

அரவக்குறிச்சி அருகே சரக்கு வேன் மீது பஸ் ேமாதி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-05-28 18:48 GMT

சிறுவன் பலி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கலைவாணர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை தனது சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு அரவக்குறிச்சி அருகே சீத்தப்பட்டி காலனியில் நடைபெறும் வாரச்சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.

வேனின் பின்பகுதியில் மாரிமுத்துவின் மாமா ராஜா (39), ராஜாவின் மகன் லிபியரசு (15), உறவினர்களான மதுமிதா (14), தர்ணிஷா (13) ஆகியோர் அமர்ந்து வந்தனர். தடா கோவில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஆம்னி பஸ் சரக்கு வேன் மீது மோதியது. இதில் லிபியரசு நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டான். ராஜா காயம் அடைந்தார்.

வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான லிபியரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, ஆம்னி பஸ் டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனந்து (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்