சேத்துப்பட்டு
கார் மோதி சிறுவன் பலியானான்.
சேத்துப்பட்டு, மே.3-
சேத்துப்பட்டு போலீஸ் நிலைய தெருவில் வசிப்பவர் சிவகுமார். இவரது ஒரே மகன் சுபாஷ் (வயது 10)விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த பேட்டரி கார் மோதியதில் சுபாஷ் படுகாயம் அடைந்தான். அவனை குடும்பத்தினர் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் இறந்து விட்டான். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றன