சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது

சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-08-26 17:49 GMT

நன்னிலம்

பேரளம் அருகே 17 வயது சிறுவன், 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை ஆசைவார்த்தை கூறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூச்சிமருந்தை குடித்து மயங்கினார். இதனை அறிந்த பெற்றோர் அவளை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்