வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் கைது
ஆத்தூரை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்து செல்போனை மீட்டனர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). இவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நின்று செல்போனில் பேசிய போது, அங்கு வந்த 18 வயது சிறுவன் வெங்கடேசின் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றான். அங்கிருந்தவர்கள் ஆத்தூரை சேர்ந்த சிறுவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உடனே பள்ளப்பட்டி போலீசார் சிறுவனை கைது செய்து செல்போனை மீட்டனர்.