அரசு பஸ் கண்டக்டரிடம் 9½ பவுன் சங்கிலி பறித்த சிறுவன் கைது

அரசு பஸ் கண்டக்டரிடம் 9½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-21 19:48 GMT

அரசு பஸ் கண்டக்டரிடம் 9½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

அரசு பஸ் கண்டக்டர்

திருவெறும்பூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 51). அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் கிழக்குறிச்சியில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு சென்ற பஸ்சில் பணியில் இருந்தார்.

அப்போது திருச்சி-தஞ்சை சாலையில் காந்திமார்க்கெட் அருகே சூளக்கரை மாரியம்மன்கோவில் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை நிறுத்தியிருந்தபோது, திடீரென ஒரு சிறுவன் கண்டக்டர் விஸ்வநாதன் அணிந்து இருந்த 9½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றார். உடனே அவரை பிடித்து காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்