கடலூர் அருகே14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சிறுவன் கைது

கடலூர் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.

Update: 2023-01-09 18:45 GMT

திருவந்திபுரம், 

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவனும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியும் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. பின்னர் அவர்கள் இருவரும் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.

அதன் பிறகு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதில் அந்த சிறுமி கர்ப்பமானாள். இதுபற்றி சிறுமி, தனது காதலனான சிறுவனிடம் கூறியதும், அவன் சிறுமியை அழைத்துக் கொண்டு விழுப்புரம் பனப்பாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்றான்.

இதில் ஆத்திரமடைந்த சிறுவனின் அக்காள், இருவரையும் திட்டியுள்ளார். இதை கேட்ட அப்பகுதி மக்கள் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் விரைந்து சென்று சிறுமியை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுதொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்