பேரையூர் அருகே பாறாங்கல் உருண்டு விழுந்தது; ஆடு மேய்த்தவர் சாவு

பேரையூர் அருகே பாறாங்கல் உருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் உயிரிழந்தார்

Update: 2023-05-10 20:56 GMT

பேரையூர், 

பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் முத்தையா மகன் நிறைகுளத்தான் (வயது 27).ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று காலை அங்குள்ள மலை அடிவாரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மலை மீது இருந்து பெரிய பாறாங்கல் உருண்டு நிறைகுளத்தான் மீது விழுந்தது. இதில் கல்லின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். .சாப்டூர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்