மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

முத்துப்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-26 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த மேலநம்மங்குறிச்சி பாமணி ஆற்று பாலம் அருகே முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 80 மதுபாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் சிரமேல்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 48) என்பதும். இவர் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 80 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்