மதுபாட்டில்கள் விற்றவர் கைது

ராமநத்தம் அருகே மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-16 18:45 GMT

ராமநத்தம் 

ராமநத்தம் அருகே உள்ள கீழக்கல்பூண்டி பேச்சாயி அம்மன் கோவில் அருகில் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரை சேர்ந்த வேலு மகன் பிச்சைக்கண்ணு(வயது 49) என்பதும், டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 13 மதுபாட்டில்களும், 650 மில்லி லிட்டர் அளவு கொண்ட 6 பீர்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்