மதுபாட்டில்கள் விற்றவர் கைது
மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் மேமாலூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த லூர்துசாமி (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.