திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு
காரியாபட்டி அருகே ஆழ்துளை கிணறு திறந்தநிலையில் உள்ளது.
காரியாபட்டி,
திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து ஆபத்தான நிலையிலும் இறந்த நிலையிலும் மீட்கப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது. காரியாபட்டியில் இருந்து பாம்பாட்டிசெல்லும் சாலையில் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த கிணற்றை விரைவில் மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.