சாலையில் ஆழ்குழாய் கிணறு; காங்கிரசார் போராட்டம்

சாலையில் ஆழ்குழாய் கிணறு; காங்கிரசார் போராட்டம்

Update: 2023-02-12 21:30 GMT

அருமனை:

கடையல் பேரூராட்சியில் மலையோர கிராமமான கணபதிக்கல், செண்பகத்தரசு கிராமங்கள் உள்ளது. கணபதிகல்லில் இருந்து செண்பகத்தரிசுக்கு செல்லும் சாலையில் தற்போது மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சாலையின் இருபுறமும் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சாலையின் நடுவில் எந்தவித அறிவிப்பும் இன்றி ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆழ்குழாய் கிணறு அமைக்க முறையாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே சாலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேல்புறம் கிழக்கு வட்டார தலைவர் கிங்சிலி சாலமன் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆல்பன், சலாமத், ராஜையன் மருதம்பாறை நேசையன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்