வியாபாரிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி
கோத்தகிரியில் கடை, கடையாக சென்று வியாபாரிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்கள பணியாளர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் மற்றும் முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோத்தகிரி பேரூராட்சி மூலம் சிறப்பு முகாம் நடந்தது. இதில் முதல், 2-வது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் சுகாதாரத் துறை சார்பில் கோத்தகிரி மார்கெட் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு செவிலியர்கள் நேரில் சென்று, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த வியாபாரிகள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினர். 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.