பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 10½ லட்சம் பேர் தகுதி

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 10½ லட்சம் பேர் தகுதி

Update: 2022-07-07 13:40 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதம் முடிந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசி போடலாம் என்று அறிவித்திருந்தநிலையில் தற்போது 6 மாதமாக அதாவது 26 வாரமாக குறைக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இரண்டாம் தவணை பெற்று 6 மாதம் ஆன 9 லட்சத்து 10 ஆயிரத்து 669 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை பெற்று 6 மாதம் ஆன 1 லட்சத்து 37 ஆயிரத்து 906 பேரும் என 10 லட்சத்து 48 ஆயிரத்து 575 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

எனவே 60 வயதுக்கு மேற்பட்ட 2-வது தவணை தடுப்பூசி பெற்று 26 வாரம் நிறைவடைந்தவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரண்டாம் தவணை செலுத்தி 26 வாரம் நிறைவடைந்தவர்களுக்கு தனியார் தடுப்பூசி மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்