வீட்டுமனை பட்டா கேட்டு பூம்பூம் மாட்டுக்காரர்கள் மனு

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் வீட்டுமனைபட்டா கேட்டு பூம் பூம் மாட்டுக்காரர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2022-11-28 18:29 GMT

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் வீட்டுமனைபட்டா கேட்டு பூம் பூம் மாட்டுக்காரர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.‌ கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, குறைகளை கேட்டு அறிந்தார். நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி, கிராம பொது பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மொத்தம் 228 மனுக்கள் பெறப்பட்டது.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை உடனடியாக எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு தெரிவித்திட கலெக்டர் உத்தரவிட்டார்.

பட்டா கேட்டு மனு

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி, பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என கலெக்டர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

கூட்டத்தில் காட்டுப்பாக்கம் கன்னிகா புரத்தைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள் 25-க்கும் மேற்பட்டோர் தாங்கள் 30 ஆண்டுகளாக குடியிருக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

துணை கலெக்டர் (கலால்) சத்ய பிரசாத், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் முரளி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) இந்திரா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்