பூமாலை வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வந்தது

பூமாலை வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வந்தது.

Update: 2023-06-28 18:17 GMT

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் உள்ள பூமாலை வணிக வளாகம் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சி புதுக்கோட்டையில் பூமாலை வணிக வளாகத்தில் ஒளிபரப்பப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த பின் கலெக்டர் மெர்சி ரம்யா குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் அப்துல்லா எம்.பி., முத்துராஜா எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர். புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம் உடனடியாக பயன்பாட்டிற்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்