திருச்சி மத்திய சிறைக்குரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள்
திருச்சி மத்திய சிறைக்குரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.
திருச்சி மத்திய சிறை அதிகாரிகள் கூண்டுக்குள் வானம் எனும் தலைப்பில் சிறைவாசிகளுக்காக அங்குள்ள நூலகத்திற்கு புத்தகங்கள் சேமித்து வருகிறார்கள். இதனால் சிறையில் உள்ள கைதிகள் மனமாற்றம், நல்லொழுக்கம் மற்றும் வாசிப்பு பயிற்சி பெறுவார்கள். இந்நிலையில் லால்குடி தொகுதி எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 327 புத்தகங்களை திருச்சி சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜெயபாரதியிடம் வழங்கினார். இதில் அரசியல் தலைவர்கள், விடுதலைபோராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள், சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறு, செயல்பாடுகள் குறித்த புத்தகங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் அலுவலக மேலாளர் திருமுருகன், ஆசிரியர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.