பொங்கல் பண்டிகை ரெயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது

நெல்லையில் பொங்கல் பண்டிகை ரெயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது.

Update: 2022-09-12 19:36 GMT

பண்டிகை கால நாட்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடும். அந்தவகையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் முன்பதிவு நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது. பொதுமக்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும் மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஜனவரி 12-ந் தேதி தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்வதற்கு நேற்று முன்பதிவு தொடங்கியது. இதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஏராளமானவர்கள் முன்பதிவு செய்ய வந்தனர். அனைத்து ரெயில்களிலும் உடனடியாக முன்பதிவு முடிந்து விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்