உலக புத்தக தின விழா

உலக புத்தக தின விழா நடைபெற்றது

Update: 2023-04-24 18:45 GMT

காளையார்கோவில்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, காளையார்கோவில் கிளை நூலகம் சார்பில் காளையார்கோவிலில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சிவகங்கை மாவட்ட தலைவர் கஸ்பார், தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையார்கோவில் வட்டார தலைவர் வீரபாண்டி, நூலக வாசகர் வட்ட தலைவர் மரியசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நூலகர் சகாயமேரி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கலைச்சுடர்மணி மற்றும் கவிஞர் தமிழ்க்கனல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் புத்தகங்கள் வாசிப்பதன் அவசியம் குறித்து உமா பேசினார். மாணவி ஹரிணி திருக்குறள் ஒப்புவித்தார். விழாவில் இந்திய செஞ்சிலுவை சங்க காளையார்கோவில் தாலுகா தலைவர் தெய்வீக சேவியர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன், காளையார்கோவில் நகர் வணிக சங்க செயலாளர் முத்துக்குமார், ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் பாண்டி ஆசிரியர் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்