கும்பகோணம்:
கும்பகோணத்தில் தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் தீத் தொண்டு நாள் பிரசாரம் மற்றும் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமை தாங்கினார். கும்பகோணம் பஸ் நிலையம் பகுதியில் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறை வீரர்கள் வழங்கினர். மேலும் தீ விபத்தில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ளும் முறை குறித்தும் விளக்கம் அளித்தனர்.