சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை.

Update: 2022-10-03 18:45 GMT

சென்னை,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 1 மணி அளவில், மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி தொடர்பை துண்டித்து விட்டார். விசாரணையில் மர்மநபர் தாம்பரம் பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. அவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே சென்டிரல் ரெயில் நிலையத்தில் துணை சூப்பிரண்டு முத்துக்குமார், இன்ஸ்பெக்டர்கள் சசிகலா, வடிவுகரசி, ரெயில்வே பாதுகாப்பு படை ஏ.எஸ்.சி. ராஜு, இன்ஸ்பெக்டர்கள் ரோகித்குமார், பத்மாகர் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் பயணிகளின் உடைமைகளை 2 மோப்பநாய்களை கொண்டு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். சுமார் 5 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.

திடீரென விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற சோதனையால் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்பாக காட்சியளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்