மோட்டார் சைக்கிள் வடை கடைக்குள் புகுந்ததில் கொதிக்கும் எண்ணெய் சிதறி 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் வடை கடைக்குள் புகுந்ததில் கொதிக்கும் எண்ணெய் சிதறி 2 பேர் படுகாயம் அடைந்தனர் .
மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 60). இவர் திருப்பரங்குன்றம் சாலையில் நடந்து சென்றார். அழகப்பன் நகர் பகுதியில் சென்ற போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பாண்டியராஜன் காயம் அடைந்தார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வடை கடைக்குள் புகுந்தது. அப்போது வடை சட்டி மீது மோதியதில் எண்ணெய் சிதறி அந்த வழியாக சென்ற வினோத்குமார், ரெங்க ஆழ்வார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சை்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் விஷ்ணுசுதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.