கொதிக்கும் வெந்நீர் உடலில் கொட்டி பெண் சாவு

திருக்கோவிலூர் அருகே கொதிக்கும் வெந்நீர் உடலில் கொட்டி பெண் சாவு

Update: 2023-02-17 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள தச்சமூலை தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி ருக்மணி (வயது 43). சம்பவத்தன்று இவர் குளிப்பதற்காக பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீரை குளியல் அறைக்கு எடுத்து சென்று கொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்து ருக்மணியின் மீது கொதிக்கும் வெந்நீர் கொட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ருக்மணியை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.்

Tags:    

மேலும் செய்திகள்