போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதிக்க வேண்டும்

பழனி முருகன் கோவிலில், போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-08 16:42 GMT

இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் தலைமையில், அக்கட்சியினர் நேற்று பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், பழனி முருகன் கோவிலில் உள்ள போகர் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் போகர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இதில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமி மற்றும் அவரது குழுவினர், கோவில் அலுவலர்கள், அரசு துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில், போகர் ஜெயந்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது காலம், காலமாக நடந்து வரும் போகர் ஜெயந்தி விழாவை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. எனவே பழனி முருகன் கோவிலில் வழக்கம் போல போகர் ஜெயந்தி விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்