கிணற்றில் நிர்வாண நிலையில் வாலிபர் பிணம்

மானூர் அருகே கிணற்றில் நிர்வாண நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-02 20:08 GMT

மானூர்:

மானூர் அருகே உக்கிரன்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை மீட்டனர்.

போலீசார் விசாரணையில், பிணமாக கிடந்தவர் தேவர்குளம் அருகே உள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்த சீனிப்பாண்டி மகன் கடல்ராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்