திருச்செந்தூர் அருகே காயத்துடன் ஆண் பிணம் மீட்பு
திருச்செந்தூர் அருகே காயத்துடன் கிடந்த ஆண் பிணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே பிரசாந்த் நகர் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். மேலும் அவரது கால் முட்டியில் சிறிய சிராய்ப்பு காயம் இருந்தது. இதுகுறித்து வீரபாண்டியன்பட்டணம் கிராம நிர்வாக அலுவலர் வேல்ஜோதி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் இந்துசூடன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, காயங்களுடன் கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.