வேப்பூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவன் போலீஸ் விசாரணை

வேப்பூர் அருகே கிணற்றில் பள்ளி மாணவன் பிணமாக மிதந்தாா். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2022-06-17 17:13 GMT


ராமநத்தம், 

வேப்பூர் அடுத்த என்.நாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகன் ராஜவேல் (வயது 16). இவர் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜவேல் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இன்று காலை 6.30 மணிக்கு மருதமுத்து வீட்டிற்கு அருகில் இருந்த 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ராஜவேல்‌ சடலமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, ராஜவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்