விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.

Update: 2023-07-17 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக தொடங்கப்படவில்லை. காலை 10 மணிக்கு கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதால், 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது. அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்