விவேகானந்தர் மண்டபத்துக்கு 2-வது நாளாக படகு சேவை தாமதம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு 2-வது நாளாக படகு சேவை தாமதமாக இயக்கப்பட்டது.

Update: 2022-05-30 17:16 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு 2-வது நாளாக படகு சேவை தாமதமாக இயக்கப்பட்டது.

கன்னியாகுமரி

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது.

படகு சேவை தாமதம்

நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு சேவை 1½ மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.

கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக கடல் நீர்மட்டம் காலை நேரத்தில் தாழ்வாகவும், அதன்பிறகு சீற்றமாகவும் தொடர்ந்து உள்ளது. இந்த மாற்றத்தால் படகு சேவை 2-வது நாளாக தாமதமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்