தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள்கடலுக்கு செல்லவில்லை

பலத்தகாற்று எச்சரிக்கை எதிரொலியாக செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2023-01-10 18:45 GMT

பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டும் பெய்து விட்டு ஓய்ந்து விட்டது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நாளையுடன் (வியாழக்கிழமை) ஓய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 75 சதவீதம் அளவுக்கு மட்டுமே மழை பெய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

கடலுக்கு செல்லவில்லை

மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 260 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்