பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

Update: 2023-08-10 19:30 GMT

வால்பாறை

தமிழ்நாட்டின் மாநில மலராக செங்காந்தள் மலர் விளங்குகிறது. இந்த மலர் செடிகள், வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையோர வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. 6 இதழ்களை கொண்ட இந்த மலரின் சிறப்பு குறித்து சங்க இலக்கியங்களில் பாடப்பட்டு உள்ளது.

தீப்பிழம்பு போல காட்சியளிப்பதால் இந்த மலர் பூத்துக்குலுங்கும் பகுதியில் தீப்பற்றி எரிவதாக நினைத்து காட்டுயானை கூட்டம் பயந்து விலகி ஓடிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் மருத்துவ குணம் கொண்ட இந்த மலர், சில இடங்களில் சாகுபடி செய்யப்பட்டு, கிலோ ரூ.1,000 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 27 மற்றும் 28-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உண்ணிச்செடிகளுக்கு மத்தியில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அழிந்து வரக்கூடிய தாவரங்கள் பட்டியலில் உள்ள இந்த வகை செடியின் தாவரவியல் பெயர் கிளோரிசாசுப்ரபா ஆகும். தற்போது பூத்துக்குலுங்கும் அதன் மலர்களை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிக்கின்றனர். மேலும் அதன் அருகில் நின்று 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்