பூத்துக்குலுங்கும் பிரம்ம கமலம் பூக்கள்

பழனியில், பூத்துக்குலுங்கும் பிரம்ம கமலம் பூக்களை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.

Update: 2022-08-29 14:29 GMT

பழனி காரமடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். டெய்லர். இவர், தனது வீட்டில் பல்வேறு மலர்செடிகளை தொட்டிகளில் நட்டு வைத்து பராமரித்து வருகிறார். இதில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் தன்மை கொண்ட பிரம்ம கமலம் செடியும் உள்ளது. தற்போது இந்த செடியில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இரவில் மட்டுமே மலரும் இந்த பூக்கள், பகலில் வாடி விடும். தற்போது அவரது வீட்டு செடியில் 8 பூக்கள் பூத்துள்ளன. இந்த பூக்களை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்