பேட்டை:
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டையில் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினேஷ், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர் சுதாமூர்த்தி, முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.