அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.

Update: 2023-04-04 20:05 GMT

பாபநாசம்:

பாபநாசம் தாலுகா ெரகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கபிஸ்தலம் வட்டார சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தமிழரசி முகாமை தொடங்கி வைத்தார். முதல்வரின் நேர்முக உதவியாளர் முகமது பீரான் ஷெரிப் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் காயத்ரி தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் ரத்தம் சேகரித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. 120 -க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா். 

Tags:    

மேலும் செய்திகள்