ரத்த கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம்

Update: 2023-08-17 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க குத்தாலம் ஒன்றிய தலைவர் மேகலா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கவிதா, மாநில செயற்குழு உறுப்பினர் ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இணை செயலாளர் அமுதா வரவேற்றார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க குத்தாலம் வட்டார நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது ரத்தத்தினால் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க கோரியும், அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களில் கல்வித் தகுதி அடிப்படையில் முன்னுரிமை அளித்து பதவி உயர்வு அளித்து பணி வழங்க கோரியும் ரத்தத்தால் கையெழுத்திட்டனர். அப்போது ஒன்றிய செயலாளர் சங்கீதா, துணைத் தலைவர் காமிலாட்சி, இணை செயலாளர் வாணி உள்ளிட்ட சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்