ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் ரத்ததான முகாம்

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2023-04-12 19:09 GMT

திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நேற்று காலை கல்லூரியில் உள்ள வித்யா சேவா ரத்னம் கே.சந்தானம் அரங்கில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லூரி செயலர் முனைவர் கோ. மீனா தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் கெஜலட்சுமி மற்றும் துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அவர் கல்லூரியின் வகுப்பறைகளைப் பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், செஞ்சிலுவை சங்க திருச்சி மாவட்ட கிளையின் தலைவரும், திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலருமான ராஜசேகரன், செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளரும், திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியருமான குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர்.டி.விஷ்ணு பிரதாப் தலைமையிலான குழுவினர் தன்னார்வலர்களிடம் இருந்து ரத்த வகைகளைச் சேகரித்தனர். முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் 110 பேர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ரத்ததானம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்