ரத்த தான முகாம்

இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான முகாம் நடந்தது.

Update: 2023-06-27 19:03 GMT

இளையான்குடி, 

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மாவட்ட ரத்த வங்கி, சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் ஆகியோர் இணைந்து ரத்த தான முகாமை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் இளையான்குடி தாசில்தார் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான், சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு ரத்த தானத்தை தொடங்கி வைத்தனர்.இளையான்குடி தன்னார்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் முகாமில் கலந்து கொண்டு 50 யூனிட் ரத்தம் வழங்கினார்கள். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் வசந்த், ரத்த வங்கி ஆலோசகர் சூசைராஜா, இளையான்குடி சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்