கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் அரசு மருத்துவமனை சார்பில் கூடலூரில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது. கம்பம் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் முருகன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
பெரியகுளம் அரசு மருத்துவமனை டாக்டர் பாரதி தலைமையிலான ரத்த சேகரிப்பு குழுவினர், ரத்தத்தை சேகரித்தனர். அதன்பிறகு ரத்ததானம் செய்தவர்களுக்கு, காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் சிராஜூதீன் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.