மேம்படுத்தப்பட்ட ரத்த வங்கி திறப்பு

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் மேம்படுத்தப்பட்ட ரத்த வங்கி திறப்பு விழா நடந்தது.

Update: 2023-04-28 20:19 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த வங்கி, தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சுகந்தி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் திலகம், அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கமரூல் ஜமான், நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் சலீம் பாட்சா வரவேற்றார். விழாவில் கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட ரத்த வங்கியை திறந்து வைத்தார். தொடர்ந்து ரத்ததான தன்னார்வலர்களுக்கும், முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் கலாராணி, ஜானகி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்