பாதையில் பாறாங்கற்களை வைத்து தடுப்பு
நாட்டறம்பள்ளி அருகே பாதையில் பாறாங்கற்களை வைத்து தடுத்ததை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை தனக்கு பாத்தியப்பட்டது என்று கூறி வழியில் பெரிய கற்களை வைத்து யாரும் செல்ல முடியாமல் வழியை அடைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பாதையை ஆய்வு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பாதையில் வைக்கப்பட்டிருந்த கற்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் நிசார் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.